இலங்கை காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி – முழு செலவையும் ஏற்க இந்தியா முடிவு
1 min readSri Lanka Kangesan Port Development – India to bear full cost
1/5/2024
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் அல்லது கே.கே.எஸ். துறைமுகம், மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 104 கி.மீ. தூரத்தில் காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு அருகே இருக்கும் காங்கேசன் துறைமுகத்தை தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துடன் இணைக்கும் நேரடி பயணிகள் கப்பல் சேவை, சுமார் மூன்றரை மணி நேரத்தில் 111 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது.
இந்நிலையில் காங்கேசன் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்த திட்டத்தின் முக்கியத்துத்தை கருத்தில் கொண்டு, காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு இந்த திட்டத்திற்கான கடன் தொகையை விட அதிகமாக இருந்ததால், இதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பொது-தனியார் கூட்டு முறையின் கீழ் இந்த திட்டத்தை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.