May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை அருவாளுடன் விரட்டிய மாமனார் /நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Father-in-law who drove away Kannayira with Aruval /comedy story / Tabasukumar

8.5.2024
கண்ணாயிரம் பழைய நினைவுகளை மறந்து பேசியதால் அவரை அந்தப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது மனைவி பூங்கொடி காட்டினார்.ஆஸ்பத்திரியில் கண்ணாயிரம் தலையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது சின்ன கோடு விழுந்திருப்பது தெரிந்தது.பஸ்விபத்தில் கண்ணாயிரத்துக்கு தலையில் ஏற்பட்ட சின்ன காயத்தால் வந்த பாதிப்பு என்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி எதுவும் சொல்லக்கூடாது என்று பூங்கொடியிடம் டாக்டர் கூறினார்.
கண்ணாயிரம் பூங்கொடி தன் மனைவி என்பதையே மறந்திருந்த வேளையில் பூங்கொடி அவரை வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தபோது உங்க வீட்டுக்கு நீங்க போங்க..எங்க வீட்டுக்கு நான் போறேன் என்று கண்ணாயிரம் சொல்ல அதைக்கேட்டு பூங்கொடி அலற.. அறையில் இருந்த டாக்டர் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தார்.
என்ன சத்தம் என்று அவர் கேட்க..பூங்கொடி கண்களை கசக்கியபடி..பாருங்க டாக்டர்..அவங்க வீட்டுக்கு அவர் போவாராம்.. என் வீட்டுக்கு நான் போகணுமாம். அவர் திருமணம் நடந்ததையே மறந்திவிட்டார் டாக்டர்நான் என்ன செய்வேன் என்றார்.
டாக்டர் பதட்டத்துடன் எக்காரணம் கொண்டும் அவருக்கு திருமணம் ஆயிட்டுன்னு சொல்லாதீங்க.. அதைக்கேட்டா அவர் மயக்கமாகி கோமா ஸ்டேசிக்குப் போயிடுவார். அதனால அவரது இளமை கால நினைவுகளை நினைவுபடுத்துங்க உற்சாகமாகிவிடுவார் .என்று சொன்னார்.
கண்ணாயிரம் அதை கூர்ந்து கவனித்தார். ஏங்க..டாகடர் சொல்லுறதைக் கேளுங்க..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. நீங்க உங்களுக்கு கலியாணம் ஆயிட்டுன்னு சொல்லுறீய..கலியாணம் ஆகாத இந்த கன்னிப்பையனுடன் கலியாணம் ஆன நீங்க வரலாமா.. நீங்க இளமையிலே யாரோயோ லவ் பண்ணுனதாக டாக்டருக்கிட்ட சொன்னுங்க..அவரை கல்யாணம் பண்ணினீங்களா இல்லை வேற மாப்பிள்ளையா..பக்கத்திலே இருக்காருன்னு சொன்னீங்க எங்கே அவர்.. உங்கக்கிட்ட சண்டை போடுறாரா.. என்னிடம் சொல்லுங்க.. இரண்டு போடு போட்டு உங்களுடன் வாழச் சொல்லுறன்..எங்க அம்மா இல்லைங்கிறதால.. நீங்க ஹெல்ப் பண்ணுறீங்க.. நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணணுமல்லா.. எங்க அம்மா எங்கே..எப்போ வருவாங்க என்று கேட்டார்.
பூங்கொடி மனதில் கண்ணாயிரம் அம்மா இறந்துவிட்டதாகச் சொல்லநினைத்தார். அதிர்ச்சியான சம்பவத்தைச் சொன்னா கண்ணாயிரம் கோமா நிலைக்குப் போய்விடுவார் என்று டாக்டர் எச்சரித்ததால் பூங்கொடி உஷாராகி.. உங்க அம்மா விரைவில் வருவாங்க.. அதுவரைக்கும் உங்களைப் பாத்துக்கிடச் சொன்னாங்க.. அவங்க வரும் வரைக்கும் நான் உங்க வீட்டிலே இருப்பேன் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா..எங்க அம்மா சொன்னா..சரி..வாங்க எங்க வீட்டுக்கு.. ஆனா இப்போ நான்வயசுப் பையன் நீங்க திருமணம் ஆனவங்க.. ஒரே வீட்டில் எப்படி.. உங்க கணவர் சண்டைக்கு வரமாட்டாரா.. அவரு பெயர் என்ன எனறு கேட்டார்.
கண்ணாயிரம் என்று சொல்ல வந்தது. ஆனால் அவருக்கு திருமணம் ஆனதைச் சொல்லக்கூடாது என்று டாக்டர் சொன்னதால் பூங்கொடி யோசித்தார்.
உடனே கண்ணாயிரம்..,ஏங்க உங்க கணவர் பெயரைச் சொல்ல ஏன் தயங்குறீங்க என்க.. பூங்கொடி. அதுவா.. கணவர் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்று சமாளித்தார்.
உடனே கண்ணாயிரம்,ஏங்க..நீங்க உங்க கணவர் பெயரையேச் சொலலமாட்டேங்கிறீங்க..அவர் மேல அவ்வளவு மரியாதைவச்சிருக்கீங்க..ஆனா அவர்..உங்களை மதிக்கல.. உங்களிடம் சண்டை போட்டுவிட்டு பிரிஞ்சி வாழுறாரா. என்ன மனுசன் அவர்..அவர் எங்கே இருக்கார் என்று சொன்னால் நான் உங்களை சேர்த்துவைப்பேன் என்று சொல்ல.. பூங்கொடி அவரிடம்.. அவர் பழைய நினைவுகள் மறந்தவராக இருக்கிறார். அதனால இப்போ அவரிடம் சொன்னாலும் அவருக்கு புரியாது. பழைய நினைவு அவருக்கு திரும்பிவரட்டும்..அப்போ பேசலாம் என்றார்.
கண்ணாயிரம் அய்யோ பாவம்..உங்க கணவருக்கு இப்படியொரு நிலையா..சீக்கிரம் அவருக்கு பழைய நினைவுகள் திரும்ப நான் பிரார்த்திக்கிறேன்..சரியா என்றார்.
பூங்கொடி தலையை ஆட்டினார்.
டாக்டர்..அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
கண்ணாயிரம்..பூங்கொடியைப் பார்த்து உங்களப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கு..நீங்க எங்கேப் போவீங்க..உங்க கணவர் உங்களை விட்டுட்டுப் போயிட்டாரே.. எங்க அம்மா சொன்னமாதிரியே என்னப் பாத்துக்கோங்க.. வாங்க வீட்டுக்குப் போவோம்.. ஊரு நாலு சொல்லத்தான் செய்யும். ஆனா நம்ம மனசு சுத்தமாக இருந்தா சரிதான்..வாங்க எங்க வீட்டுக்குப் போவோம் என்றார்.
அந்த நேரத்தில் அங்கு ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. பூங்கொடி கைக்காட்டி அந்த ஆட்டோவை நிறுத்தினார். பூங்கொடியும் கண்ணாயிரமும் ஆட்டோவில் ஏற, அந்த ஆட்டோ புறப்பட்டது.
அப்போது அருவாஅமாவாசை பாய்ந்து ஓடி வந்தார்
.அவரைப் பார்த்த கண்ணாயிரம்.. ஆட்டோவை நிறுத்தாதீங்க போகட்டும் என்க.. அருவாஅமாவாசை நிறுத்து நிறுத்து ஆட்டோவை நிறுத்து என்று கத்தினார்.
கண்ணாயிரம் ஆட்டோவை நிறுத்த வேண்டாம் என்று சொல்ல..அருவாஅமாவாசை மறைத்துவைத்த அருவாளை எடுத்தார். கண்ணாயிரம் அதைப் பார்த்து..ஆ என்று அலறியவாறு ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தாதீங்க..வேகமாக ஓட்டுங்க.. அருவாவியாபாரியைச் சத்தம் போட்டேன் அவர் என்னை வெட்டவருகிறார்..என்று சொல்ல ஆட்டோ டிரைவரும் அப்படியா.. இப்பப் பாருங்க..எவ்வளவு வேகமாமாகப் போறேன்னு பாருங்க என்று ஆட்டோவின் வேகத்தை அதிகப்படுத்தினார்.

ஆட்டோ வேகமாக சென்றது. தன்னைவிட்டுவிட்டு சென்றுவிடுவார்களோ என்று நினைத்த அருவாஅமாவாசை ஏய் நில்லுடா..ஏய் நில்லுடா..அருவாளைத் தூக்கிக்கொண்டு விரட்டினார்.
ஆட்டோக்காரர்..ம்..என்னிடம் போட்டியா என்று வேகமாக ஓட்டினார். பூங்கொடி விபரீதத்தை உணர்ந்து.. கொஞ்சம் நிப்பாட்டுங்க.. அவர் ஆட்டோவில் ஏறட்டும் என்க ஆட்டோக்காரரோ.. ஏங்க புரியாமப் பேசுறீங்க.. அவர் இவரை வெட்டுறதுக்காக அருவாளோடு விரட்டுறாரு..நீங்க ஆட்டோவை நிறுத்தச் சொல்லுறீங்க என்றார்.
பூங்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
கண்ணாயிரம்..பாத்தீங்களா..அருவா விக்கிறவன் அருவாவோடு விரட்டுறதைப் பாருங்க.. காலம் ரொம்ப கெட்டுப் போச்சு.. ஆட்டோவில லிப்டு கொடுக்க முடியுமா என்றார்.
ஆட்டோ டிரைவரும் விவரம் தெரியாமல் ம்..என்றவாறு ஆட்டோவை திருப்பத்தில் வேகமாகத் திருப்ப. ஓடி வந்த அருவாஅமாவாசை அருவாளோடு ஓட்டப்பந்தய வீரர் போல் ஓடி வந்தார்.
அதைப் பார்த்தவர்கள்.. என்னாச்சு இப்படி விரட்டுறாரு.. என்று நினைத்தனர்.
மோட்டார்சைக்கிள் வாலிபர் திடிரென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொலை விழும் முன்னால போலீசுக்கு போன் பண்ணுவோம் என்று போன் பண்ண.. இன்ஸ்பெக்டர் ஜீப்பில் மின்னல் வேகத்தில் வந்து ஆட்டோவை மறிக்க.. கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் விழிக்க.. ஜீப்பிலிருந்து இறங்கிய போலீசார்.. அருவாளுடன் ஓடி வந்த அருவாஅமாவாசையை ஒரே அமுக்காக அமுக்கி குண்டு கட்டாக கட்டி ஜீப்பில் தூக்கிப் போட்டனர்..அவர்..ஓ என்று அலறினார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.