June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் தேடிய ஏட்டைய்யா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram Thietaya Etaiyya/ comedy story / Tabasukumar

13.5.2024
கண்ணாயிரம் பழைய நினைவுகள் மறந்து பேசியதால் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி எதுவும் சொல்லக்கூடாது என்று கண்ணாயிரம் மனைவி பூங்கொடியிடம் டாக்டர் அறிவுரை கூறினார்.
பின்னர் கண்ணாயிரத்துடன் பூங்கொடி வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டபோது ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்திருந்த பூங்கொடியின் தந்தை அருவாஅமாவாசை நிறுத்துங்க.. நிறுத்துங்ங்க ஆட்டோவை நிறுத்துங்க.. நானும் வருகிறேன் என்று அருவாளோடு ஆட்டோவை விரட்ட.. ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது.
இதைப்பார்த்த மோட்டார் சைக்கிள் வாலிபர் திடுக்கிட்டார். கண்ணாயிரத்தை அருவாஅமாவாசை கொல்வதற்காக அருவாளுடன் விரட்டுவதாக நினைத்து போலீசில் புகார் செய்ய, போலீசார் ஜூப்பில் விரைந்து வந்து அருவாஅமாவாசையை கைது செய்து போலீஸ்நிலையத்துக்கு தூக்கிச்சென்றனர்.
இதைப் பார்த்த பூங்கொடி.. அய்யோ.. ஆட்டோவை நிறுத்தூங்க ஆட்டோவை நிறுத்துங்க என்று கத்த, ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார்.
கண்ணாயிரம்.. ஏங்க ஆட்டோவை நிறுத்தச் சொன்னீங்க என்று பூங்கொடியைக் கண்டிக்க பூங்கொடியோ அருவாஅமாவாசை தன் தந்தை என்று சொன்னால் கண்ணாயிரம் கோபம் அடைந்து தன்னை விரட்டிவிடுவார் என்று பயந்தார்.
கண்ணாயிரம் பூங்கொடியிடம்..ஏங்க ஒரு அருவாவிக்கிறவனுக்கு இவ்வளவு பரிதாபப்படுறீங்க..அவர் என்னை அருவாளால் வெட்டிவிட்டால் என்னப் பண்ணுவீங்க..என்று கேட்டார்.
பூங்கொடியோ..அவர் அப்படி செய்யமாட்டார் என்க..அது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கண்ணாயிரம் கேட்க..பூங்கொடி..வயசானவர்..வெட்டமாட்டார்..என்று சமாளித்தார்.
உடனே கண்ணாயிரம்..அவர் வயசானவரா..ஆட்டோவைத் துரத்திக்கொண்டு அருவாளுடன் எவ்வளவு வேகமாக ஓடி வந்தார்..பார்த்தீங்களா..போலீஸ் தூக்கிட்டுப் போய் நல்லா உதைக்கட்டும்..என்றார்.
பூங்கொடி ஒன்றும் சொல்லமுடியாமல் திகைக்க ஒரு போலீஸ்காரர் மோட்டார்சைக்கிளில் வேகமாக அங்குவந்தார்.
கண்ணாயிரம் ..இன்ஸ்பெக்டர் அய்யா கூப்பிட்டாங்க வாங்க என்று சொல்ல.. கண்ணாயிரம் எனக்கு என்ன பயம்..இதோ வருகிறோம்.. ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவை விடுங்க என்று சொல்ல ஆட்டோ..கடகட சத்தத்துடன் போலீஸ் நிலையம் விரைந்தது.
போலீஸ் நிலையத்தில் அருவாஅமாவாசையிடம் இன்ஸ்பெக்டர் கடுமையான விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கண்ணாயிரம் ஆட்டோ உள்ளே புகுந்தது.
கண்ணாயிரம் வந்தவுடன் இன்ஸ்பெக்டர் அவரிடம்..என்ன கண்ணாயிரம்..இது உன் மாமனாரா என்று கேட்க..கண்ணாயிரம் அவசரமாக..இல்லை..இல்லை இவர் அருவாவியாபாரி என்றார்.
அதைக் கேட்ட அருவாஅமாஅமாவாசை.. சார்..அவன் பொய் சொல்லுறான்.. நான்தான் அவனுக்கு முறை மாமன் என்றார்.
கண்ணாயிரம் உடனே மறுத்தார்.சார்..என் முறை மாமன் சின்னதா மீசை வச்சிருப்பார்.. சிம்பிளா கேராவச்சிருப்பார்..தலை முடியெல்லாம் நரைச்சிருக்காது..கருப்பா இருக்கும்.. ஆனா இவர் அப்படி இல்லை.. பெரிய மீசை வச்சிருக்கார்..மிரட்டுகிறமாதிரி கேராவச்சிருக்கார்.. முடியும் வெள்ளையா இருக்கு.. இவர் என் முறைமாமன் என்று சொல்லி ஆள்மாறாட்டம் பண்ணுறாரு..என் முறைமாமனுக்கு சொத்து அதிகமாக இருக்கு..அதை ஆட்டையப் போட..என்னுடைய முறைமாமன் என்று கதைவிடுகாறார்.அவர் ஊருல இருப்பார். இவர் ஏமாத்துறார்..பிடிச்சி உள்ளேப் போடுங்க சார் என்றார்.
உடனே அருவாஅமாவாசை..சார்..சார்..நான் நாப்பது வயசில இருக்கும்போது சின்னதா மீசை வச்சிருந்தேன். சிறுசா கேரா வச்சிருந்தேன். ஒருபய என்னைக்கண்டு பயப்படல.. நான் வேற ஊர் பஞ்சாயத்துக்குப் போய் வருவேனே எல்லாம் தோத்துப் போச்சு..அப்புறம் பெரிய மீசைவவச்சேன்.. மிரட்டுறமாதிரி நீள கேராவச்சேன்..கையிலே அருவாஎடுத்தேன்.. பஞ்சாயத்துக்கு நான் போனா எல்லோரும் பயந்தாங்க..எனக்கு வருமானம் வந்துச்சா..அதனால இந்த மீசையையும் கிருதாவையும் நிரந்தரமா வச்சிட்டேன்.என்றார்.
உடனே இன்ஸ்பெக்டர்..சரி..ஆனா கண்ணாயிரம் உங்களை மாமன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேங்கிறாரே..என்க..சார்..பஸ்கவிழ்ந்த விபத்திலே இவனுக்கு பழைய நினைவெல்லாம் மறந்திட்டுசார் என்று சொல்ல..இன்ஸ்பெக்டர் அப்படியா..கண்ணாயிரத்துக்கு முறைமாமன் என்று சொல்லுறீங்க..பிறகு ஏன் அருவாளுடன் நடு ரோட்டில் அவரை கொல்ல விரட்டினீங்க என்று சூடாகக் கேட்க..அருவாஅமாவாசை, சார்..சார்.. அப்படி சொல்லாதீங்க.. ஆட்டோவில் என்னை ஏற்றிக்கொண்டு போகும்படி சொல்லித்தான் ஆட்டோவை நிறுத்தச்சொன்னேன். ஆட்டோவை நிறுத்தாமல் போனதால்..அருவாளுடன் விரட்டினேன் .மற்றபடி என் மருமகனை கொல்வதற்காக விரட்டுவேனா நீங்களே சொல்லுங்க என்றார்.
பூங்கொடியைப் பார்த்து..நீங்க சொல்லுங்க இவர் யார்என்று இன்ஸ்பெக்டர் கேட்க..பூங்கொடி திணறினார்.
இப்போதைக்குச் சமாளிப்போம் என்று நினைத்தவர்..சார்..இவர் அருவாவியாபாரி..ஆட்டோவை நிறுத்தாததால் அருவாளுடன் துரத்தினார் என்று சொன்னார்.
அதைக்கைட்ட அருவாஅமாஅமாவாசை..அய்யோ..என் மகள் இப்படி பேசுறாளே..நான் என்ன செய்வேன்..என் மகா வேற முழுகாம இருக்காளே.. நான் என்ன பண்ணுவேன் என்று அழுதார்.
அதைப் பார்த்த..பூங்கொடி..இன்ஸ்பெக்டர் சார்..இவரை எச்சரித்துஅனுப்பிவையுங்க..என்று சொல்ல.. அருவாஅமாவாசையைப் பார்த்து..யோவ்..யோவ்..அவருக்கிட்ட எழுதிவாங்கிக்கிட்டு விரட்டிவிடுங்க..இவரால எப்பவும் பிரச்சினைதான் வருது..இந்த ஊர் பக்கமே அவர் வரக்கூடாது என்று சத்தம் போட்டார்.
அருவாஅமாவாசையை போலீசார் தள்ளிக்கொண்டு செல்ல,அவர்..அய்யோ..இது அநியாயம்..இது அநியாயம் என்று சொல்லிக்கொண்டு சென்றார்.
அவர் போனபின்பு..கண்ணாயிரம்..சார்..நல்லா சத்தம் போட்டீங்க..சார்.இந்த போலீஸ்நிலையத்திலே ரங்கையான்னு ஏட்டையா உண்டே..அவர் எங்கே என்று கேட்க.. இன்ஸ்பெக்டர்.. என்ன ரங்கையாவா..அப்படி யாரும் இல்லை என்க.. கண்ணாயிரம்..என்ன அப்படி சொல்லுறீங்க..ஏட்டையா ரங்கையாவா உங்களுக்குத் தெரியாதா.. என்ன நீங்க.. அவர் காலையிலே ஸ்டேசன் முன்பு வரும் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் கொடுத்துட்டுத்தான் பணியைத் தொடங்குவார்.. எதற்கெடுத்தாலும் ராமா..ராமா என்பார்.. ஐந்துபாசைக்கூட வாங்க மாட்டாரு.. அவர் இல்லையா..என்று கேட்டார்.
உடனே இன்ஸ்பெக்டர்..போலீஸ்காரர்களைப் பார்த்து..யாருய்யா..அந்த ரங்கைய்யா என்று கேட்க..அவர்கள் சிரித்தவாறு அவரா..புழைக்கத் தெரியாதவர்..ஓவ்வொரு வருஷமும் ஒரு ஸ்டேசனில் இருப்பார். இப்போ..ராமநாதபுரத்திலே இருக்கார் என்க, இன்ஸ் பெக்டர் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி கீழே வைத்தார்.
பூங்கொடியிடம் என்ன ஆச்சு..டாக்டருக்கிட்ட காட்டீனீங்களா என்று கேட்க.. பூங்கொடி கண்களை துடைத்தபடி.. ஆமா சார்..இப்பதான் டாக்டருக்கிட்ட போயிட்டு வர்ரோம்.. பஸ்விபத்தில இவர் தலையிலே லேசா அடிபட்டிருக்கு.. ஜவுளிக்கடைக்காரர் இவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தியதால் இவருக்கு மூளையில் அதிர்வு ஏற்பட்டு பழைய நினைவுகளை மறந்திட்டாரு.. இருபது வயசிலிருந்து இருபத்தெட்டு வயசுவரைக்கும்தான் அவருக்கு நினைவு இருக்கு. என்னை திருமணம் செய்ததையே மறந்திட்டாரு.. என்னை வேறு யாரோ என்று நினைக்கிறார். இவருக்கு அதிர்ச்சியான எதையும் சொல்லக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கார். அதனால..என் அப்பாஅருவாஅமாவாசையை நான் அருவாவியாபாரி என்று சொன்னேன். கட்டிய மனைவியையே மறந்த இவரைவச்சிக்கிட்டு நான் என்ன செய்வேன் என்றுகண்ணீர் வடித்தார்.
முழுகாம இருக்கீங்க..என்று இன்ஸ்பெக்டர் இழுக்க..பூங்கொடி..ஆமாசார். ஆமா.நான் முழுகாம இருக்கேன்.எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கேன்..என்னை பொண்டாட்டின்னு ஏற்றுக்கொள்ளாத இவரை இன்னும் முழுகாக இருக்கேன்..அதாவது தலைமுழுகாம இருக்கேன் ..என்றார்.
அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், முழுகாம இருக்கீயளா என்று கேட்டால் கண்ணாயிரத்தை முழுகாம இருக்கேன் என்றுபூங்கொடி சொல்லுதே..அப்பாட நமக்கே தலை சுத்துது. என்றவாறு பாட்டிலில் இருந்த ஐஸ்வாட்டரை மடக்மடக் மடக் என்று குடித்தார். கண்ணாயிரம் என்ன நடக்குது இங்கே என்றவாறு விழித்தபடி இருந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *