தென்காசி பகுதியில் பலத்த மழை- குற்றாலம் அருவியில் தண்ணீர்
1 min read
Heavy rains in Tenkasi region – water in Courtalam falls
13.5.2024
தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டியது.
நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் வெப்பம் அதிகமாக உள்ளது. இதே போன்று தென்காசி மாவட் டத்திலும் கடந்த சில நாட்க ளாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் கோடை மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. தென்காசி பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று கடந்த 10 நாட்களாக தற்போது வீசி வருகிறது. இருந்தாலும் நேற்று காலையில் இருந்தே கடுமையான வெப்பம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீ ரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 6 மணி வரை நீடித்தது. அதன் பிறகும் சாரல் மழை பெய்து வந்தது. திடீரென பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மேற்கு தொடர்ச்சி
மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு தண்ணீர் கொட் டியது. ஜூன் மாதம் வழக்கமாக குற்றாலத்தில் சீசன் தொடங்கும். கோடை மழை நிடித்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்தால் விரைவில் சீசன் தொடங்கவாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி குற்றாலம் பகுதியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்தது குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று பெய்த பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழத் துவங்கியது இதனால் இன்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.இன்று காலை கடையம் பகுதியில் நல்ல மழை பெய்தது.