June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அருகே சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

1 min read

A teenager was arrested for posting a video of weapons on social media near Red Fort

13.5.2024
தென்காசி மாவட்டம், புளியரை அருகே உள்ள கேசவபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் ஆயுதத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார் இதையறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை போலீஸ் சரகம் கேசவபுரம் மேலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரது மகன் சுடலைமுத்து (வயது 23) இவர் சமூக வலைதளங்களில் கத்தியை காட்டி மிரட்டும் வகையில் இன்ஸ்ட்ரா காமில் வீடியோ பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதை அறிந்த புலியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கையில் ஆயுதத்துடன் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட சுடலைமுத்துவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *