July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

12ம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம்- தென்காசி ஆட்சியர் அறிவுரை

1 min read

College Dream Program in Tenkasi- District Collector Participation

14.5.2024
தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர் கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் தலை மையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர் கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இ.சி.ஈ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில்காலை 9.00 மணிமு தல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு பேசியதாவது :-

பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்னபடிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெ டுக்கலாம்? எனஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத்தேர்வுசெய்ய வேண்டிய தருணம் இது முதல்மதிப்பெண்பெற்றவர் கள்தான்வாழ்க்கையில்முன் னேறுவார்கள். அதிகமார்க் வாங்கியவர்கள்தான் அனைத் துவசதியானவாழ்க்கையை யும் ழ்வார்கள்எனும் தவறான மனப்போக்கை மாண வர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வுசெய்என்று பெற்றோர்கள் அறிவுறுத்தவேண்டும். பள்ளிக்கல்வியை முடித்து. உயர்கல்விக்குச் செல்லும் மாண வர்கள் முதலில் உயர்கல்வியில் என்னென்ன துறைகள்
இருக்கிறது. அதில் என்னென்ன பட்டப்படிப்புகள் இருக்கிறது. அதில் நமக்கு விருப்பமான பட்டப்படிப்பு எது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

பெற்றோர்களும் மாணவர்கரும். எம்பிஏ முடித்தால் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும்பணிபுரியலாம் உலகம்கணினிமையம்அறிவியல்சார்ந்தபடிப்பு என்பதால் கணினித்துறைகளை தேர்ந்தெடுத்து படித் தால் ஐ எஸ் ஆர் ஓ, சி எஸ் ஐ ஆர் போன்ற அரசுநிறுவனங்களில் விஞ்ஞா னியாக பணிபுரியலாம் மருத்துவம் சார்ந்தபடிப்புகளில் அலோபதி, சித்தா, ஹோமியோ பதி, யுனானி, யோகா, நேச்சு ரோபதி போன்றவைபடிக்கலாம்.

கால்நடைமருத்துவப் படிப்பான பிவிஎஸ்வி, பிபி டிஎனப்படும்பி டி எனப்படும்பிஸியோதெர பி. பி.எஸ்.ஸி.. நர்ஸிங், பிஃபார்ம் டிஃபார்ம்பார்ம ஸிபடிப்புகளையும் தேர்ந்தெ டுக்கலாம்.

ஊடகத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பி.ஏ. ஊடகத்துறை, பி.எஸ்ஸிவி ஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூ னி கே ஷன், எலக்ட்ரானிக்ஸ்மீடியா, ஜர் னலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பிளஸ்டூவில் வணிகம் கணக்குப்பிரிவு படித்த மாணவர்கள், பி காம்படிக்க லாம் அதைத்தொடர்ந்து சிஏ, சி எம் ஏ ஐ சி டபிள்யூ ஏ எல் ஏசிஎஸ் ஜசிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி.பெற்றால் மருத்துவர், பொறியாளருக்கு இணையானபதவியும், ஊதியமும் கிடைக்கும் உயர்ந்த
நிறுவனங்களில் ஆடிட்டராகப் பணிபுரியும் வாய்ப்புகிடைக்கும்
மேலாண்மை படிப்பு பெரிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் விளம்பரப்பிரிவில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும்

ஐடிஎனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஓவியத்தில் திறமை இருப்பவர்கள் அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் பிஎப்ஏ படிப்பில் சேரலாம். இசைத்துறையில் ஆர்வமிக்கவர்கள்அரசு இசைக் கல்லூரிகளில் சேரலாம். திரைப்படத்துறையில் கால்பதிக்க விரும்புப வர்களுக்கு சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் பலபிரிவுகளுக்கு டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப் படுகிறது. எனவே, அனைத்து மாணவ மாணவிக ளும் இந்த நிகழ்ச்சியில் முழு மையாக கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமானஷதுறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன் என்னும் கையேட்டினை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் வெளி யிட மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார்.’ இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச் சியில் சங்கீதா சின்னராணி, (முதன்மைக்கல்வி அலுவ லர் தென்காசி) அனைவரையும் வரவேற்று பேசினார். பிராங்க்ளின் (உதவி இயக்கு நர் மாவட்ட திறன் வளர்ச்சி அலுவலகம்) நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர். முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
இரா.இ ளவரசி, ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாண விகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.