எங்களுக்கு எதிராக ஆடு மாடுகளை பலியிட்டு பில்லி சூனியம்: டி.கே. சிவக்குமார் பகீர் தகவல்
1 min readSacrifice of goats and cows against us and witchcraft: D.K. Sivakumar Bhakir information
31.5.2024
கேரளா மாநிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அகோரியை வைத்து தனக்கு எதிராக சிறப்பு பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு பூஜை நடத்தப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் என டி.கே. சிவக்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
கேரள மாநிலம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் அகோரிகள் மூலம் பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு சடங்குகள் செய்யப்படுகிறது.
இந்த சடங்குகள் எனக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுததான். இந்த சடங்கு ராஜ கன்டகா மற்றும மரண மோகன ஸ்டம்பானா என அழைக்கப்படுகிறது.
அகோரிகள் 21 சிகப்பு நிற ஆடுகள், மூன்று எருமை மாடுகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகிவற்றை இந்த செய்வினை சடங்கிற்காக பலி கொடுத்துள்ளனர்.
இந்த சடங்குகளை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து அவர்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் நான் கவலைப்பட மாட்டேன். அது அவர்களுடைய நம்பிக்கை முறை. தீங்கு விளைவிக்கும் அவர்களின் முயற்சிகள் மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், நான் நம்பும் சக்தி என்னைக் காப்பாற்றும். நான் ஒவ்வொரு நாளும் மக்கள் பணி செய்ய செல்லும்போது கடவுளை பிரார்த்தனை செய்வேன்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.