அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு-துரைமுருகன் அறிவிப்பு
1 min readMinister Senji Mastan announces new charge-Duraimurugan
18.5.2024
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.