முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளில் பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல்-தமிழக அரசு உத்தரவு
1 min read
Sweet Pongal with lunch in schools on birthdays of prominent personalities-Tamil Govt
18.5.2024
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில், ”இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.