June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்- பொதுமக்கள் குளிக்க தடை

1 min read

Flooding at Kurdalam Waterfalls- Ban on public bathing

26.7.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும், மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த அருவிகளில் குளிப்பதற்கும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மலையில் நனைவதற்கும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி ,குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழையின் வேகம் சற்று குறைந்து அதன்பின் கருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்த உடன் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *