June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி குலசேகர நாதர் கோவில் திருவிழா நடத்துவதில் குழப்பம்- பொதுமக்கள் முற்றுகை

1 min read

Confusion in holding festival in Tenkasi Kulasekara Nathar Temple – public siege

26.5.2024
தென்காசி குலசேகர நாதர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா காப்பு கட்டுவதில் கோவில் நிர்வாக அதிகாரிக்கும் அர்ச்சகர்களும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில்
கோவில் மண்டகப்படி காரர்கள் அனைத்து சமுதாய தலைவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் நிர்வாக அதிகாரியை முற்றுகையிட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் உள்ள பழமை வாய்ந்த ஆலயமான காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குலசேகரநாதர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழா 10 சமுதாயப் பொதுமக்கள் சார்பில் மண்டகப்படி தாரர்கள் மூலம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் ஆணி பெருந்திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி (இன்று) 26.06.2024 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 11 மணிவரை கோவில் நிர்வாக அதிகாரி அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்கு வரவில்லை

இதனால் ஆனித் திருவிழாவை சிறப்பாக நடத்தும் 10 சமுதாய தலைவர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கோவில் நிர்வாக அதிகாரி முருகனை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த தென்காசி பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

அதன் பின்னர் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் தாமதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆனித் திருவிழா கட்டளைதாரர்கள் அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பாளர்
தி.சுரேஷ் உடையார், மற்றும் மண்டகப் படிதாரர்கள் டாக்டர் ராமசாமி, சுரேஷ் உடையார், ராமச்சந்திரன், இசக்கி ஆசாரி, ராஜேந்திரன், இசக்கி மூப்பனார், முருகன், கோபால் நாயுடு, மாதவன் நாடார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆனிப் பெருந்திருவிழா ஜூலை மூன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆனி திருவிழாவை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலர்கள் அர்ச்சகர்கள் எந்தவித குழப்பத்திற்கும் இடம் அளிக்காமல் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கட்டளைதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.கோவில் நிர்வாக அதிகாரி முருகனின் அலட்சியப் போக்கு காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *