சின்னகுமார்பட்டியில் அங்கன்வாடி அமைக்க கோரிக்கை
1 min read
Request to set up Anganwadi in Chinnakumarpatti
5.7.2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் சின்னகுமார்பட்டியில் அங்கன்வாடி அமைத்து தர ஏற்பாடு செய்திட வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர், கிராம மக்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கு பொ.சிவபத்மநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சி, சின்னகுமார்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள வெங்கடாம்பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடிக்கு சென்று வருகின்றனர். காலையில் குழந்தைகளை அழைத்துச் செல்வதும், மதியம் குழந்தைகளை திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவதும் பெற்றோருக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும் அந்த அங்கன்வாடியில் அதிக குழந்தைகள் உள்ளதால், சின்ன குமார் பட்டியில் தனியாக ஒரு அங்கன்வாடியோ அல்லது மினி அங்கன்வாடியோ அமைத்து தர ஏற்பாடு செய்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநா தனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதி அன்பழகன்,புங்கம்பட்டி ராஜபாண்டியன், ஏ.பி.என். குணா, வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், பாக்யராஜ் உடனிருந்தனர்.
இதையடுத்து சிவபத்மநாதன், இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு, சின்னகுமார்பட்டியில் தனி அங்கன்வாடி அமைத்து தர வேண்டி கோரிக்கை மனுவினை அனுப்பி வைத்தார்.