கோவிந்தப்பேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
1 min read
Special village council meeting at Govindapperi
5/7/2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கோவிந்தப்பேரி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார்
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் உள்ள மண்சுவர் கொண்ட வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு
புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் செய்தல், ஆகிய திட்டங்களுக்கு தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து திருமலை முருகன் கோவிந்தப்பேரி ஊராட்சி துணைத் தலைவர் இசையேந்திரன், ஊராட்சி செயலாளர் மூக்காண்டி,
5- வது வார்டு உறுப்பினர் நாகராஜன் 4- வது வார்டு உறுப்பினர் சுகிர்தா மற்றும் மாரித்துரை, கிருஷ்ணன், செந்தில்குமார், சிங்கக்குட்டி சிவா, மீனா, ராஜா முருகன், கண்ணன் மற்றும் 30க்கும் மேற்பட்ட மகளிரும் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் கோவிந்தப் பேரி ஊராட்சி செயலாளர் மூக்காண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.