June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

1 min read

CM special camp with people in all panchayats in Tenkasi district

7.7.2024
தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் “51 சிறப்பு முகாம்கள் இரண்டாம் கட்டமாக 1107.2024 முதல் 29.08.2024 வரை 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துக்களிலும் நடைபெறவுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற முன்னெடுப்பின் கீழ் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டியதை உறுதி செய்வது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும் என கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரி துறையால் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டம் அன்றாடம் இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி. தென்காசி மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற தென்காசி மாவட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைத்து 51 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்படும். இந்த முகாம்கள் தென்காசி மாவட்டத்தில் 11.072024 முதல் 29.08.2024 வரை 17 தினங்களில் தென்காசி மாவட்டத்தில் ள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைத்து 51 சிறப்பு முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேற்படி முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் இதற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சேவை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிலேயே பெற்று பரிசீலிக்கப்படும். மேலும் இணையவழி விண்ணப்ப முறைகளில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அனைத்து முகாம்களிலும் இ-சேவை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த முகாம்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல், உரிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு, போன்றவற்றை எவ்வித குறைபாடும் இன்றி செய்திட காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் கண்டுள்ளவாறு தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 51 முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற
வேண்டும்.

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,
தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *