சாட்டை முருகன் பாடியதை நான் பாடுகிறேன் என்னை கைது செய்யுங்கள்-சீமான் ஆவேசம்
1 min read
I Sing Arrest Me Sung by Sathai Murugan-Seaman Obsession
11.7.2024
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது:- புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்? கள்ளச்சாராயம் என்ன காற்றில் பறந்து வருகிறதா? கடத்தி விற்கிறவர்களே நீங்கள்தான்.. கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்கிறது. எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்.. என்னை விட அதிகமாக சாட்டை துரைமுருகன் பேசிவிட்டாரா… என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். இருந்த பாட்டை பாடுவதில் என்ன அவதூறு இருக்கிறது. எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? ” இவ்வாறு ஆவேசமாக பேசினார்.