June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே போலி டாக்டர் கைது

1 min read

Fake doctor arrested near Tenkasi

12.7.2024
தென்காசி அருகே பண்பொழி பகுதியில் மருத்துவம் படிக்காமல் 17 ஆண்டுகள் மருத்துவமனை நடத்தி சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் பரமசிவன் இவரது மகன் கவுசிக் (வயது 10) . இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த – 7ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் சென்ற கவுசிக் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக பண்பொழி பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கவுசிக்கை அவரது உறவினர் பூவையா அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது தலைப்பகுதியில் சரியாக சுத்தம் செய்யப்படாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் எட்டாம் தேதி கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார் .அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சைபிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

இது பற்றி அவரது தாயார் தெரிவிக்கும் பொழுது பண்பொழியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல் வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல் முறையான சிகிச்சையளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தார்.இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத்தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா தலைமையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் .

அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் திருநெல்வேலியை சேர்ந்த அரசு மருத்துவர் பாபு என்பவரது பெயரில் செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனையில் கட்டிடத்தின் உரிமையாளர் கேரளமாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரது மகன் அமீர் ஜலால் மருத்துவம் பார்த்துவருவதையம் கண்டறிந்தனர்.மருத்துவ அதிகாரிகள் குழுவினர் சோதனைக்கு சென்றபோது முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தைத் தொடர்ந்து அச்சன்புதூர் காவல்நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா புகார் அளித்தார் .புகாரைத் தொடர்ந்து அச்சன்புதூர் போலீசார் போலி டாக்டர் அமீர்ஜலால் என்பவரை கைதுசெய்தனர். மருத்துவம் படிக்காமல் இந்த போலி டாக்டர் 17 ஆண்டுகாலமாக பண்பொழியில் மருத்துவம் பார்த்தது தற்போது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா பண்பொழியில் செயல்பட்டு வந்த சூர்யா மருத்துவமனையின் அனுமதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *