தென்காசி மாவட்டத்தில் 14-ந் தேதி ஆதார் பதிவு சிறப்பு முகாம்
1 min read
Aadhaar registration special camp on 14th in Tenkasi district
12.7.2024
தென்காசி , சங்கரன்கோவில் கோவில்பட்டி தலைமை அஞ்சலகங்களில் வரும் 14.07.2024
ஞாயிறு அன்று ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்திட சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களைப் பெற ஆதார் அவசியம் தேவையான ஆவணமாக உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற ஆதாரில் பயோமேட்ரிக் அப்டேட் செய்வது அவசியமாகிறது. மேலும் பொதுமக்கள் 10 ஆண்டுகளில் தங்கள் ஆதாரில் எவ்வித அப்டேட்டும் செய்யாத பட்சத்தில், தற்போது அவர்களின் பயோமேட்ரிக் அப்டேட் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆதாரில் பயோமேட்ரிக் அப்டேட் செய்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் விடுமுறை நாட்களிலும் ஆதார் சேவையினை பெற ஒரு சிறப்பு ஏற்பாடாக வரும் 14.07.2024 ஞாயிறன்று ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலங்கள், வில்லிசேரி (நாலட்டின்புதூர்), செந்தட்டியாபுரம்(கரிவலம்வந்தநல்லூர்), குறும்பலாப்பேரி (கீழப்பாவூர்), சிவஞானபுரம் (எப்போதும்வென்றான்), வேம்பார், சுப்ரமணியபுரம் (வாசு தேவநல்லூர்) நகரம் பஞ்சாயத்து அலுவலகம் (முள்ளிகுளம்) மற்றும் லட்சுமிபுரம் அஞ்சல் அலுவலகம் (கோவில்பட்டி) ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வரும் ஞாயிற்று கிழமை நடைபெறயுள்ள சிறப்பு ஆதார் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.