சங்கரன்கோவிலில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி
1 min read
World Population Day Pledge at Shankaran Temple
12.7.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2005 மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை உறுதிமொழி யினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் தேதி லக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்து எத்து துறை அலுவலர்களும் உலக மக்கள் தொகை தினம் றுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியின் விவரம் பின் வருமாறு
நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் மற்றும் போதிய பிறப்பு இறப்பு இடைவெளி முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
சிறு குடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது. முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்பநல முறைகள், முதல் குழந்தைக்கும். இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய டிய சாதகமா மான சூழ்நிலையை உருவாக்குதல், தாய்சேய் நலத்தை பாதுகாத்தல். பெண்கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல்வடிவம் கொடுத்தல், இளம்வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன் от 001 உறுதியளிக்கிறேன்.
குடும்ப நலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச்செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவன் நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கரபாண்டியன். துணைத்தலைவர் செல்வி. சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாரிமுத்து. சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா,சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி. அலிஸ்தாயம்மாள், மரு.பாலகுமார் (வட்டார மருத்துவ அலுவலர்). மருசூர்யா. மருராஜேஸ்வரன், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலரின் நலக்கல்வியாளர் எஸ். ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் சமுத்திரம், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், முத்துப்பாண்டி, சின்னத்தம்பி. மற்றும் செவிலியர்கள், வட்டார சுகாதார பணியாளர் கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.