நடப்பு நிதியாண்டில் மத்திய நிகர நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி உயர்வு
1 min read
Central net direct tax collection increased by Rs 5.74 lakh crore in the current financial year
13.7.2024
நடப்பு நிதியாண்டில் மத்திய நிகர நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சி.பி.டிடி எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டான 2024-25 ம் ஆண்டில் ஏப்.01-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலான ஆண்டில் மத்திய நிகர நேரடி வரியாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 357 கோடி வசூலாகியுள்ளது. இது 20 சதவீத வளர்ச்சி ஆகும்.
அதே நேரம் கார்ப்பரேட் வரியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்து 274 கோடி வசூலாகியுள்ளது. இது 12.5 சதவீத வளர்ச்சி ஆகும். தனிநபர் வருமானம் மற்றும் செக்யூரிட்டி பரிவர்த்தனை வாயிலாக ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 36 கோடி வசூலாகியுள்ளது. இது 24 சதவீதம் ஆகும்.