இடைத்தேர்தலில் ‛இண்டியா’ கூட்டணி 10 -பா.ஜனதா 2 இடங்கள்
1 min readIn the by-election ‘India’ alliance 10 – PA Janata 2 seats
13.7.2024
7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.,2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீஹார், பஞ்சாப், ம.பி., தமிழகம் ஆகிய 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இதில் பதிவான ஓட்டுகள் நேற்று ( ஜூலை 13) எண்ணப்பட்டன.தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஆனியூர் சிவா வெற்றி பெற்றார்.மேற்கு வங்க மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ராய்கன்ஜ், ராணாகாட் தக்ஷின், பக்தா ,மணித்காலாஆகிய 4 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த தேஹ்ரா, நலகார்க் தொகுதிகளிலும் அம்மாநிலத்தை ஆளும் காங்., வெற்றி பெற்றது.
ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ.,கைப்பற்றியது. தேஹ்ரா தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மனைவி வெற்றி பெற்றார்.
பா.ஜ.க, ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் , மங்களூர் ஆகிய தொகுதிகளில் காங்., முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றது.பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் அம்மாநில ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர் 23 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ம.பி.,யின் அமரவாரா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் முன்னிலையில் இருந்தார்.பீஹாரின் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.மொத்தம் 13 தொகுதிகளில் பா.ஜ., 2 இடங்களில் வெற்றி பெற்றது.
‛ இண்டியா ‘ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 4, ஆம் ஆத்மி 1, திரிணமுல் காங்கிரஸ் 4, தி.மு.க., 1 இடங்களில் வெற்றி பெற்றன.
சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.