பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு – கம்யூ. ஆர்ப்பாட்டம்
1 min readOpposition to Handover of Old Courtalam Falls to Forest Department – Commun. Demonstration
14.7.2024
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, உள்ளிட்ட ஏராளமான அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா உட்பட வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்கின்றனர்.
காலம் காலமாக இது நடைமுறையில் உள்ளது 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்து வருவது நடைமுறை வழக்கம் இந்நிலையில் கடந்த மே மாதம் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டு இறந்து விட்டான் இந்நிலையில் தென்காசி மாவட்ட நிர்வாகம் திடீரென சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு என்று சொல்லி 24 மணி நேரமும் குளித்து வந்த பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதித்ததோடு மாவட்ட ஆட்சியர் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையுடன் இணைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார்.
இதனால் குற்றால அருவிகளை சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் அருவிகளை நம்பியே உள்ளது அருவிகளில் குளிக்க வரக்கூடிய மக்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களை வழங்குவதற்கு கடைகள் வைத்ததோடு மற்றும் அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் ஓட்டுவது உள்ளிட்ட தொழிலை செய்து வந்தனர் இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கக்கூடிய செயலாக இருந்தது.
மேலும் பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது இதனால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அந்த பகுதியினுடைய வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது பழைய நடைமுறையில் அருவிகளில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவிற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு கூடுதலாக மூன்று மணி நேரம் சேர்த்து இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது அருவிகளில் குளிப்பதற்கு 24 மணி நேரமும் அனுமதி வழங்க வேண்டும் அருவிபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தென்காசி வட்டார செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின் குமார், சங்கரி மாரியப்பன் முன்னிலை வைத்தனர் கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் உ. முத்துப்பாண்டியன் பேசினார் நிறைவாக ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பாலபாரதி பேசினார் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி அசோக்ராஜ் வேல் மயில் தங்கம் மாவட்ட குழு உறுப்பினர்கள் பால்ராஜ் பாலு நடராஜன் ஆயிஷா பேகம் மணிகண்டன் மற்றும் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் பாதிப்புக்கு உள்ளான பழைய குற்றாலம் அருவியை ஒட்டியுள்ள ஆயிரப்பேரி கிராமப் பொதுமக்கள் ஆயிரப்பேரி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேவதி வியாபாரி சங்க தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் தென்காசி வட்டார பொது தொழிலாளர் சங்க நிர்வாகி அய்யப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.