அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரில் அனுமதி
1 min readMinister Durai Murugan admitted to hospital
13.7.2024
தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் நேற்று காலை அறிவாலயம் வந்திருந்தார்.
அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவர் மயங்கிய நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.