June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Tamil Nadu government to respond in Chavku Shankar case, Supreme Court order

15.7.2014
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலா நடந்து கொண்டார்?. சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது. ஆனால் அவருக்கு ஏன் இடைக்கால பாதுகாப்பு தரக்கூடாது? என உச்சநீதிமன்றம் வினவியது.

சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும். சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மகளிர் காவல் துறையினரை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12-ஆம் தேதி குண்டா் சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடா்ந்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை வழங்கியது. அதில், நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், குண்டா் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி, அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கினா்.

இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *