அரியப்பபுரம்: அரசு தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு
1 min read
Ariyappapuram: Prize for students who excelled in government exams
21/7/2024
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்,
அரியப்பபுரத்தில் காமராஜர் கிராம வளர்ச்சி குழு சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரத்தில், காமராஜர் கிராம வளர்ச்சி குழு சார்பில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி 7ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாதனை மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வெள்ளைபனை யேறிப்பட்டி இந்து தொடக்க, உயர்நிலைப்பள்ளி நிர்வாகி சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரியப்பபுரம் தினேஷ்குமார், கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், ஏ.கே.வி. பாலிடெக்னிக் ஆலோசகர் தமிழ்வீரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரியப்பபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திகுமார், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சொசைட்டி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், நிர்வாகிகள் சிவன்பாண்டியன், செந்தூர் முருகன், காசிபாண்டியன், சேர்மலிங்கம், பொன்குமார், ஏ.பி.என்.குணா, ராஜபாண்டி, மேசியாஜெயசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுபாஷ் (எ) இசக்கி முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.