November 11, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் வழியாகச் செல்லும் மேட்டுப்பாளையம் ரெயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

1 min read

Nellai – Mettupalayam rail extension for another 3 months

29.7.2024
நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது.
சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற அக்டோபர் மாதம் முடிய மேலும் 3 மாதங்களுக்கு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோயம்புத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.