ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தில் வெளிநடப்பு செய்தவர்கள் போட்டிக் கூட்டம்
1 min readA competition meeting of those who walked out in Audaiyanoor Panchayat Council
30.7.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
ஆவுடையானூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணைத்தலைவர் தலைமையில் 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன், போட்டி கூட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி தலைமையில் நேற்றுமுன்தினம் (திங்கள்) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் மகேஸ்வரி மற்றும் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதுடன் துணைத்தலைவர் தலைமையில் 10 உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வெளியெ தரையில் அமர்ந்து துணைத்தலைவர் தலைமையில் போட்டி கூட்டம் நடத்தினர். இதில் உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, இந்திரகுமார், செல்வி, சூரியராஜ், செல்வமேரி, கனியம்மாள், தமிழ்செல்வி, பத்திரகாளி, ராஜாசிங், பொன்மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில், ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடு;த்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும், கடந்த 28-6-24 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 12 உறுப்பினர் கலந்து கொள்ளாத நிலையில், 3 உறுப்பினர்களை மட்டும் வைத்து ஊராட்சி சட்டத்திற்கு எதிராக நடத்திய ஊராட்சி மன்ற கூட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீர்மான நகலினை வழங்கி, நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இந்நிலையில் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், கடந்த கூட்டங்களில் உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில், ஊராட்சி பகுதிகளில் வாறுகால் சுழற்சி முறையில்சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. வைத்திலிங்கபுரத்தில் பேவர் பிளாக் சாலை பணி நிறைவு பெற்றுள்ளது. பாதியில் நின்ற லெட்சுமிபட்டி சாலை முடிக்கப்பட்டது. இது போன்ற உறுப்பினர்கள்செயலால் ஊராட்சி பகுதியில் அத்தியாவசிய பணிகள் முடங்கும்நிலை உள்ளதாகக தெரிவித்தார்.