மாதாபட்டணம் மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி
1 min readMathapatanam students participated in the human chain
30.7.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலை பள்ளியின் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் போதை பொருள் ஒழிப்பினை வலியுறுத்தி மாணவர்களின் மனித சங்கிலி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்தசிபியா தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பரிதி,செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் அனைவரையும் வரவேற்றார்.
போதைப்பொருள்களை பயன்படுத்தாதீர்கள் என்ற தலைப்பில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் மாணவரிடையே உரையாற்றினார்.
இதில் ஊரில் உள்ள பெரியோர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலபணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குற்றாலிங்கம் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சாரண சாரணியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மோசஸ் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ், சேர்மராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் அந்தோனி துரைராஜ் போதை பொருள் பயன் படுத்தினால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி மாணவர் களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.