தென்காசியில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
1 min readTamil Nadu Government Employees Union Executives meet District Collector in Tenkasi
30.7.2024
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் மற்றும் துறைவாரி சங்க நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தென்காசி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை உடன் திறந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பேசப்பட்டது. துரித நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் தெரு நாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தோம் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்
பெரும்பாலான அரசு ஊழியர்கள் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் மனு பெறும் கூட்டம் உள்ளிட்ட ஆய்வுக் கூட்டங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் விடுமுறை தினங்கள் மற்றும் அலுவலக நேரத்திற்கு பின் (தவிர்க்க முடியாத இனங்களை தவிர) ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்க்க கேட்டுக் கொண்டோம் கண்டிப்பாக ஊழியர் நலன் சார்ந்து இனி வருங்காலங்களில் கூட்டங்களை நடத்துவதாகவும் விடுமுறை தினங்கள் அலுவலக நேரத்திற்கு பின் தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மனம் புன்படும்படி உயர் அதிகாரிகள் பேசுவது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஊழியர்கள் அலுவலர்கள் நலம் பேணி காக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளருமான க.துரைசிங் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவருமான பெ.க..மாடசாமி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாநில தலைவருமான வே.வெங்கடேஷ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவரும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளருமான க.மார்த்தான்L பூபதி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வை.சீனிப் பாண்டி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ரா. இசக்கிதுரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவருமான சு.கோபி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவரும் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாவட்ட தலைவருமான க.பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில பொருளாளர் ஞா.ஸ்டான்லி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளரும் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல செயலாளருமான த.சேகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளரும் தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவருமான சே .ராதாகிருஷனன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான இரா . ராஜ் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க பிரச்சார அணி செயலாளர் .ம.மனோகர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தணிக்கை யாளர் ரா.பீமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.