June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கவர்னர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

1 min read

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

RN Ravi went to Delhi to attend the Governors Conference

1.8.2024
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் கவர்னர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரையாற்ற உள்ளார். 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். கவர்னரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *