கடையநல்லூரில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
1 min read8 pounds of jewelery stolen from an old woman in Kadayanallur
14.9.2024
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வெட்டுபவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடையநல்லூர் முத்துகிருஷ்ணா புரம் பருத்திவிளை தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 80). இவர் தனது பேரனுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி நிமித்த மாக அவரது பேரன் நெல்லைக்கு சென்றுவிட்டார். இதனால் கஸ்தூரி மட்டும் வீட்டில் தனியாக இருந் துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு தூங்கிய மூதாட்டி நள்ளிரவில் 1 மணியளவில் வீட் டின் பின்பக்கத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மாடிப்படியில் முகமூடி அணிந்து மறைந்து நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவர், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். அப் போது மூதாட்டி திருடன், திருடன் என கூச்சலிடவே மர்மநபர் மூதாட்டியின் ல் துணியை வைத்து வாயில் துணியை திணித்து விட்டு நகையை பறித்துக் கொண்டு தப்பி
ஓடிவிட்டார்.
இதுகுறித்து கஸ்தூரி கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த கடையநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வை யிட்டனர். இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.