பாவூர்சத்திரம் அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
1 min readTwo people arrested near Tenkasi under the Anti-Gun Act
14.9.2024
தென்காசி மாவட்டம்,பாவூர்சத்திரம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான ராமநாதபுரம் வட்டாலூர் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் அருண் பாஸ்கர் (வயது 25) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகன் முத்துக்குமார் (வயது 25) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஏ.கே.கமல் கிஷோர் முக்கு பரிந்துரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் பாஸ்கர், முத்துக்குமார் ஆகிய இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.