தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
1 min read
Tamil Nadu Primary School Teachers Alliance General Committee Meeting
8.10.2024
தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குபாராட்டு விழா மற்றும் புதிய மாநில செயற்குழு உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பரூக் நினைவு ஆரம்பப் பள்ளியில் வைத்து நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார்.
மாநிலச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசியதுடன் எதிர்காலத்தில் மாவட்ட கிளை மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
தென்காசி மாவட்டத்தில் காலியாக இருந்த மாநில செயற்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்களாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கலை உடையார் மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் தேர்தலை நடத்திக் கொடுத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சுப்பிரமணியன் போட்டியின்றி ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சங்கரன்கோவில் ஒன்றியம் செந்தட்டியாபுரம் அரிசன் துவககப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலன் மேரி கிறிஸ்டிபாய் ,மற்றும் சீவநல்லூர் அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆக்னெஸ்மேரி ஆகியோர்க்கு பாராட்டு விழா நடத்தி சிறப்பு செய்யப்பட்டது.
டிட்டோ -ஜாக் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்டப் பொதுக்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு நிதி உதவி பெறும் ஈராசிரியர் பள்ளிகளில் மாணவர்கள் நலன் கருதி மாற்றுப் பணியில் கூடுதலாக ஓர் இடைநிலை ஆசிரியரை நியமிக்க வட்டார, மாவட்டக்கல்வி அலுவலர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளி தொடக்க நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை வேண்டி நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் , அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டியும் ஆதரவு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரில் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.