கடையம் அருகே கரடி தாக்கி பெண் படுகாயம்
1 min read
Girl injured in bear attack near shop
17.10.2024
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி கல்யாணிபுரம் 1 வது வார்டு கீழத்தெருவை சேர்ந்த ராசு அம்மாள் ( வயது 76) வயலுக்கு சென்ற பொழுது அங்கு வந்த கரடி ராசு அம்மாளை துரத்தி கீழே தள்ளி முதுகில் காலால் தாக்கியது அதில் மூதாட்டி ராசு பலத்த ரத்த காயம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடையம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதேபோல வயலுக்குச் சென்ற மூன்று நபர்களை கரடி கடித்து படுகாயமுற்றவர்கள் அரசு மருத்துவமனை பாளையங்கோட்டையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்கள்
அவர்களை நேரில் சந்தித்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் மருத்துவ உதவி வழங்கியதோடு அரசு தரப்பில் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ராசு அம்மாளை சந்தித்து மருத்துவ உதவி தொகை வழங்கி பழங்களும் வழங்கினார்
மேலும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிற ராசு அம்மாளுக்கு வனத்துறை சார்பில் வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை ரூபாய் 55 ஆயிரம் பெற்று தருவதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.ஜெயக்குமார் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை கீழப்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெகதீசன், வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது யாகூப், ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட்,
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன், ஒலி, மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்