June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் இளைஞர் திறன் திருவிழா

1 min read

Youth Skills Festival in Tenkasi

28.10.2024
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தென்காசியில் இன்று இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அடையார் ஆனந்த பவன், டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், கேப்பிட்டல் சிஎன்சி, ஃபெட் கிராஃப்ட், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் போன்ற பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்று தங்களுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர்.

இதில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு மூன்று மாதம் இலவச பயிற்சி முடிந்த உடன்
வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இதில் 350 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மதி இந்திரா பிரியதர்ஷினி கலந்து கொண்டு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் பற்றி விளக்கி கூறினார்.

இது நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,மாவட்ட திறன் மையம் போன்றவை சார்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் முத்துப்பாண்டியன், கலைச்செல்வி,
காமராஜ், சாமத்துரை, பிரபாகர்,வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *