மணிப்பூரில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது
1 min read
7 rebels arrested in Manipur; Confiscation of weapons
5.11.2024
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில மாதங்களாக அங்கு அமைதி காணப்பட்ட நிலையில், சமீப காலமாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் 7 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தவுபால் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.