டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
PM Modi congratulates Trump
6.11.2024
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வென்ற, எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Advertisement
பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து மற்றும் மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதியை மேம்படுத்த பாடுபடுவோம்.
உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையே உறவை வலுப்படுத்தப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.