October 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கல்வி கடன், தொழில் கடன்- ஆட்சியர் வழங்கினார்.

1 min read

In Tenkasi district, the Collector distributed educational and business loans.

27.10.2026
தென்காசி மாவட்டத்தில் கல்வி கடன் மற்றும் தொழில் முனைவோருக்கான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோருக்கான கடன் உதவி வழங்கும் முகாம் மற்றும் கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் இன்று (27-10-2026) நடைபெற்றது.

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், 2026-2027 நிதியாண்டில் தென்காசி மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.இ. (MSME) பிரிவின் கீழ் ரூ.2,000.45 கோடி கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருட்கள், உட்கட்டமைப்பு வசதிகள், திறமையான பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள், வணிக வசதிகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வதற்குச் சாதகமாக உள்ளன.

இம்முகாமில் வங்கிகள் மூலமாகவும், மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாகவும் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைத் தொடங்குவதற்காகப் பயனாளிகளுக்குக் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 1,461 பேருக்கு ரூ.84.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

156 மாணவர்களுக்கு ரூ.15.11 கோடி கல்விக் கடன்! நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான கல்விக் கடன் உதவிகளைப் பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டார அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, 156 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15.11 கோடி மதிப்பிலான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பாரதப் பிரதமரின் வித்யாலட்சுமி ( PM Vidya Lakshmi) போர்டல் வாயிலாக வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்களைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், 1461 பயனாளி களுக்கு ரூ.84.90 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மரு.தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் பரமேஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் முத்துச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் தன செல்வம் மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள் அரசு அலுவலர்கள், பயனாளிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *