தென்காசி மாவட்ட வள பயிற்றுநராக பணிபுரிய ஆட்கள் தேர்வு
1 min read
Recruitment for the post of Tenkasi District Resource Instructor
28.10.2026
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் மூலம் மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் தேர்வு செய்வதற்கு கீழ்க்காணும் தகுதிகளை உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது தகுதி :30 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் கல்வி தகுதி: ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.மொழி : தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் SHG / கூட்டமைப்புகள், பயிற்றுநர் (Trainer), NGO துறை அல்லது பிற அரசு துறை திட்டங்களில் குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பணியாற்றிய அனுபவமும், பல்வேறு முக்கிய பங்குதாரர்களுக்கு பயிற்சி வழங்கிய அனுபவமும் இருக்க வேண்டும். மேலும், கணினியை திறம்பட பயன்படுத்தும் நடைமுறை அறிவும், Android மொபைல் செயலிகளை கையாளும் திறனும் பெற்றிருக்க வேண்டும்
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது மேலும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வட்டார அளவிலான கூட்டமைப்பு களிலும் மற்றும் கீழ்க்கண்ட முகவரிக்கு 02.11.2026 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.