தென்காசி மாவட்டத்தில் தேவையான ரசாயன உரங்கள் கையிருப்பு உள்ளது
1 min read
Tenkasi district has the required stock of chemical fertilizers
6.11.2024
தென்காசி மாவட்டத்தில் போது மான அளவு ரசாயன உரங்கள் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் கனகம்மாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத் தில் நெல், உளுந்து, மக்காச் சோளம், பருத்தி, கரும்பு தோட்டக்கலைப்பயிர்கள், தீவனப்பயிர்கள் உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. நடப்பு பருவத்தில் இது வரை 2,783 ஹெக்டேர் நெல், 14,177 ஹெக்டேர் மக்காச்சோளம், 18,869 ஹெக்டேர் உளுந்து, 633 ஹெக்டேர் பாசிப்பயறு, 664 ஹெக்டேர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள் ளதாக விபரங்கள் பெறப் பட்டுள்ளன.
பருவமழை கூடுதலாக மழையும் கருதுவதால் அதிகளவில் சாகுபடி செய் யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. அனைத்து 18 விவசாயிகளுக்கும் போது மான அளவு ரசாயன உரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன். நேற்றைய நிலவரப் படி தென்காசி மாவட்டத் தில் மொத்தம் 6,841 டன் யூரியா, 1,532 டன் டிஏபி, 649 டன் பொட்டாஷ், 4082 டன் காம்ப்ளக்ஸ், 388 டன் சூப்பர் பாஸ்பேட் என அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங் -நிலங்களில் அதிகளவு கம்போஸ்ட், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், மக் கிய பண்ணைக்கழிவுகள் போன்ற இயற்கை உரங் களை அடியுரமாக இடவேண்டும்.
மண் நலன் காக்கவும், அதிக விளைச்சலை தொடர்ந்து பெறவும்
அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக பாக்டீரியா போன்ற உயிர் உரங்களையும் தேவை யான அளவு பயன்படுத்த வேண்டும். மண் பரிசோத னையில் பரிந்துரைக்கப் பட்ட அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.
ரசாயன உரங்கள் பொதுவாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர் களுக்கு அதிகளவில் வழங் குகின்றன. யூரியாவில் 46% தழைச்சத்தும், சிங்கள் சூப்பர் பாஸ்பேட்டில் 16% மணிச்சத்தும், பொட்டா ஷில் 60% சாம்பல் சத்துக் கள் இருக்கும். காம்ப்ளக்ஸ் உரங்களில் இவற்றில் ஒன் றிற்கு மேற்பட்ட சத்துக்கள் இருக்கும். டிஏபி உரத்தில் % தழைச்சத்தும், 46% மணிச்சத்தும் இருக்கும். 15:15:15 காம்ப்ளக்ஸ் என் றால் தழை, மணி, சாம் பல் ஆகிய மூன்று சத் துக்களும் 15% இருக்கும். 20:20:0 காம்ப்ளக்ஸ் என் றால் அதில் 20% தழை, மணிச்சத்துக்கள் மட்டும் இருக்கும். சாம்பல் சத்து இருக்காது. 20:20:0:13 என் றால் அதில் கூடுதலாக 13% கந்தகச்சத்தும் இருக்கும்.
எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவை யான உரங்களை மட்டும் பயிர்களுக்கு வழங்கி அதிக மகசூலும், லாபமும் பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கனகம்மாள் தெரிவித்துள்ளார்.