September 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து – சி.பி.எஸ்.இ. தகவல்

1 min read

De-recognition of 21 schools across the country – CBSE

7.11.2024
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும் தேர்வு விதிகளின் கீழ் இயங்குகின்றனவா என அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது.

அந்த வகையில் அண்மையில் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில பள்ளிகள் போலி மாணவர் சேர்க்கை, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு பிறகு விதிகளின்படி இயங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் 6 பள்ளிக்கூடங்களின் தரநிலை குறைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தகவல்கள் சி.பி.எஸ்.இ. செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 21 பள்ளிகளில் 16 பள்ளிகள் டெல்லியைச் சேர்ந்தவை, 5 பள்ளிகள் ராஜஸ்தானைச் சேர்ந்தவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *