லண்டனில் படிப்பை முடித்து அண்ணாமலை 28-ந்தேதி திரும்புகிறார்
1 min read
He will return to Annamalai on 28th after completing his studies in London
7.11.2024
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளை இந்த ஒருங்கிணைப்புக் குழு எடுத்து வருகிறது.
இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பிறகு, தொடர்ச்சியாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.