எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Court orders Edappadi Palaniswami to pay damages of Rs.1.10 crore
7.11.2024
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால். இவர் சமீப காலமாக, கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல் அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததுடன், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.