ஜம்மு காஷ்மீரில் கிராம காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
1 min read2 village guards shot dead in Jammu and Kashmir
8/11/2024
ஜம்மு காஷ்மீரில் கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஒமர் அப்துல்லா இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதும், கொல்வதும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொள்ளாத, வெளிமாநில மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி, சுட்டுக்கொன்றுள்ளனர். முன்ஷ்லா தார் வனப்பகுதியில் வைத்து நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரை கடத்திய பயங்கரவாதிகள், அவர்களை சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றுள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.