September 11, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்களுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடல்

1 min read

Chief Minister’s interaction with firecracker workers in Virudhunagar

9.11.2024
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக விருதுநகருக்கு வருகை தந்துள்ளார். இதற்காக சென்னையில் இருந்து காலையில் விமானத்தில் புறப்பட்டு, 10.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் விருதுநகர் புறப்பட்ட முதல்-அமைச்சருக்கு, பகல் 11 மணி அளவில் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 60 ஆயிரம் பேர் திரண்டு, தி.மு.க. கொடியுடன் முதல்-அமைச்சரை வரவேற்றனர். இதையடுத்து சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்களை சந்திக்கும் முதல்-அமைச்சர், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு, ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதையடுத்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 35 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *