குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
1 min readTourists bathe enthusiastically in Kurdala waterfalls
9.11.2024
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீராவதுமாக தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான அளவில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து சீராக கொட்டி வருகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து மகிழ்ந்தனர்.
ஐந்தருவியின் ஐந்து கிளைகளில் தண்ணீர் விழுந்து வந்த நிலையில் தற்போது 3 கிளைகளில் மட்டுமே அதிகம் தண்ணீர் விழுந்து வருகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் சீராக விழுவதால் விடுமுறை தினத்தை கழிப்பதற்கு குற்றால அருவிகளை நோக்கி சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிக அளவில் வருகை தந்துள்ளனர்