July 6, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி – செங்கோட்டை பகுதிகளில் பயிர் காப்பீடு- வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

1 min read

Crop Insurance in Tenkasi – Red Fort Areas – Information from Assistant Director of Agriculture

14.11.2024
தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற அனைவரும் உடனடியாக பயிர் காப்பீடு செய்யுமாறு தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நா.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரங்களில் நெல் மற்றும் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கும், நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்தும் பயிர்களை பாதுகாப்பதற்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர்கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய தகுதி உடையவர்கள்.

விவசாயிகள் கீழ்க்கண்ட விபரப்படி பயிர் காப்பீடு செய்வதால் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் போது பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையிலும், உத்திரவாத மகசூல் அடிப்படையிலும், மகசூல் இழப்பீட்டிற்கு ஏற்ப இழப்பீடு தொகை பெற வாய்ப்புள்ளது. இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி பொது காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கான பிரிமியம் தொகை ரூ.534 செலுத்த வேண்டும். நெற்பயிருக்கு பிரிமியம் தொகை 16.12.2024க்குள் செலுத்த கடைசி நாளாகும். இதே போன்று ஒரு ஏக்கருக்கு உளுந்து பயிருக்கு ரூ.231ம் மற்றும் பாசிப்பயிருக்கு ரூ.186.76ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பாசிப்பயிருக்கு பிரிமியம் செலுத்த 15.11.2024 கடைசி நாளாகும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட பாரத ஸ்டேட் வங்கி பொது காப்பீடு நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாகவோ அல்லது பொது இசேவை மையம், தபால் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள முன்மொழி படிவம், வங்கி கணக்கு புத்தக நகல், பயிர் அடங்கல், பட்டா நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகை செலுத்தி ஒப்புகை சீட்டில்

விபரங்களை சரிபார்த்து ரசீது பெற்று கொள்ள வேண்டும். மேலும் எதிர் பாராத

விளைவுகளில் இருந்து பயிர்களை பாதுகாத்து கொள்ள விவசாயிகள்

அனைவரும் பயிர் காப்பீடு செய்யுமாறு தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நா.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.
One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.