டெல்லியில் 2-வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு
1 min read
Delhi’s air pollution rises for 2nd day
14.11.2024
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 432 ஆக பதிவாகியுள்ளது. இது “கடுமையான” வகையின் கீழ் வருகிறது.
காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன.
காலை 5:30 மணியளவில், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. காலை 7 மணியளவில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் விமான நிலையத்தில் தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது.