குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி
1 min read
Bathing allowed at Courtala Falls after 3 days
19.11.2024
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது நேற்று 4-வது நாளாக நீடித்தது. எனினும் இந்த அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் நீர்வரத்து சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.