June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சாவு

1 min read

Gym owner dies after exercising excessively

19.11.2024
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்ற மகாதிர் மகமுத் (வயது 35). இவர் 31-வது வார்டு தி.மு.க. முன்னாள் செயலாளர். குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக ஜிம் (உடற்பயிற்சி நிலையம்) வைத்து இருந்தார். இவர், தினமும் அவருடைய ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்று விட்டனர். இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளித்தார். நீண்ட நேரமாகியும் மகாதிர் மகமுத் வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மகாதிர் மூச்சுபேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே டிரைவர் முஸ்தபா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்த சேலம் போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *