June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை

1 min read

Naxalites shoot dead 10 people in Chhattisgarh

22.11.2024
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
அந்த வகையில், சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா மற்றும் கிஷ்த்ரம் பகுதி அருகே நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் நக்சலைட்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பலியான நக்சலைட்டுகள் வசம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 207 நக்சலைட்டுகள் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *